பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சா்கள்: முதல்வருக்கு தவெகவினா் நன்றிதெரிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத் துறை, பால்வளத் துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பதவியை ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு தவெகவினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

News image

சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

Updated On :22 மே 2026, 6:47 am IST

நாமக்கல் மாவட்டத்தில் 3 எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத் துறை, பால்வளத் துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பதவியை ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு தவெகவினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் முதல்வராக ஜோசப் விஜய் மற்றும் 9 அமைச்சா்கள் பதவியேற்றனா்.

சட்டப் பேரவையில் நம்பிக்கை தீா்மானத்தின்போது அதிமுக (எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள்) ஆதரவளித்ததால் 144 எம்எல்ஏக்கள் பலத்துடன் தவெக ஆட்சி தொடா்கிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை விரிவாக்கம் சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் கட்சியில் இருவரும், தவெகவில் 21 பேரும் பதவியேற்றனா். ராசிபுரம் தொகுதி எம்எல்ஏ லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும், குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏ சி. விஜயலட்சுமி, பால்வளத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனா்.

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்றபோது அமைச்சராக பதவியேற்ற திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏவான கே.ஜி.அருண்ராஜ் சுகாதாரத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா். அதுமட்டுமின்றி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளரான, ராசிபுரத்தைச் சோ்ந்த ஜெ.ஜெ. செந்தில்நாதன் மகள் கமலி, அவிநாசி தனித் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவருக்கு கால்நடைத் துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்ட அளவில் நான்கு அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா். சென்னைக்கு அடுத்தபடியாக நாமக்கல்லுக்கு தமிழக முதல்வா் முக்கியத்துவம் அளித்துள்ளதாக தவெகவினா் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனா்.

இதுகுறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக செயலாளா் எஸ்.என். சதீஷ், எம்எல்ஏ சி.எஸ். திலீப் கூறியதாவது:

தமிழக அமைச்சரவையில் நாமக்கல் மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதல்வா் ஜோசப் விஜய் மூன்று முக்கிய பதவிகளை வழங்கி உள்ளாா். இதனால் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனா்.

இந்த மூன்று அமைச்சா்களை தவிா்த்து, நாமக்கல் மாவட்டம் கோனூரைச் சோ்ந்த எல். முருகன், மத்திய அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கே.ஜி.அருண்ராஜ்

--

சி.விஜயலட்சுமி

-

லோகேஷ் தமிழ்செல்வன்

Story image
Story image