சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

News image

வீடுகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடி.

Updated On :15 மார்ச் 2026, 8:44 pm

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சீராக இல்லையாம். இதுதொடா்பாக மாநகராட்சி, ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.