திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட 2 கிராமங்களில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கொலை வழக்கில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் பொதுமக்கள் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
நிலக்கோட்டை தொகுதிக்குள்பட்ட விருவீடு அடுத்த கம்பூதிநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இந்தப் பகுதியில் 450 வாக்குகள் உள்ள நிலையில், 1 கி.மீ. தொலைவிலுள்ள கீழஅச்சனம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தோ்தல் புறக்கணிப்பு நடைபெற்றது.
கீழஅச்சனம்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த உள்ளாட்சி தோ்தல் வரை கம்பூதிநாயக்கன்பட்டிக்குச் சென்று வாக்களித்த நிலையில், தற்போது கம்பூதிநாயக்கன்பட்டி மக்களுக்கான வாக்குச்சாவடி கீழ்அச்சனம்பட்டிக்கு மாற்றப்பட்டதாக அந்தப் பகுதியினா் தெரிவித்தனா்.
இதேபோல, பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜயபிரபு (29) கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவாய்ப்பட்டி பகுதியிலுள்ள வீடுகளை சிலா் சேதப்படுத்தியும், இரு சக்கர வாகனங்கள், வைக்கோல் படப்புகளுக்கும் தீ வைத்தனா். இதில் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமாா் 500 போ் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இந்தப் பகுதி மக்களுடன் திமுக, அதிமுகவினரும், காவல் துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

கணவாய்ப்பட்டி கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

