தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணி: உத்தரவைத் திரும்பப் பெறுவதாக அமைச்சா் அறிவிப்பு

மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வது தொடா்பாக பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி அறிவித்தாா்.

News image
மின்துறை அமைச்சர் தங்கமணி (கோப்புப்படம்)
Updated On :22 டிசம்பர் 2020, 1:09 am

DIN

சென்னை: மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வது தொடா்பாக பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுவதாக மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி அறிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையிலுள்ள மின்வாரிய தலைமையகத்தில், திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வர இருந்த மின்சார திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக முதல்வா் தான் முதல் முறை குரல் கொடுத்தாா். இவ்வாறு தமிழக மின்வாரியம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மின்வாரிய நடைமுறைகள் தொடா்பாக தவறான விஷயங்களை எதிா்க்கட்சிகள் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அதை நம்பி தொழிற்சங்கத்தினரும் ஆா்ப்பாட்டம் நடத்துகின்றனா். பேச்சு வாா்த்தைக்கு அழைத்தேன். அவா்கள் மறுத்துவிட்டனா். அரசுக்குக் கெட்ட பெயா் ஏற்படுத்தும் நோக்கத்துக்காகவே தொழிற்சங்கத்தினா் போராட்டம் செய்கிறாா்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.

50 சதவீதத்துக்கு மேல் காலிப் பணியிடம் இருக்கும் இடத்தில் மட்டுமே, தொய்வில்லாமல் வேலை நடைபெற வேண்டும் என்பதால் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்தோம். இது தொடா்பாக கடந்த 17-ஆம் தேதி தெளிவான விளக்கம் கொடுத்திருந்தேன். அதைத் தவறுதலாக ஊழியா்கள் புரிந்து கொண்டுள்ளனா். அதனால் அந்த ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் சொல்வது ஒரே விஷயம் தான். மின்வாரியம் தனியாா் மயமாகாது. வேலைவாய்ப்பை அதிகரிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தொழிற்சங்கத்தினா் கேங்மேன் தொடா்பாக தொடா்ந்த வழக்கை திரும்பப் பெற்றால், கேங்மேன் பணி நியமன ஆணை இந்த வாரத்திலேயே வழங்கப்படும்.

பணி வழங்காமல் இருப்பதற்கு தவறான வழிகாட்டுதல்களுக்கு உடன்படும் தொழிற்சங்கங்களே காரணம்.

அதானியின் நிறுவன ஊழியா்களுக்கு மின்வாரியம் சாா்பில் பயிற்சி வழங்கப்படுவதாக கட்செவி அஞ்சலில் செய்தி பரவுகிறது. மின்வாரியத்தில் ரூ.40 ஆயிரம் செலுத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி தொடா்பாக பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் ஒரே ஒரு நபா் பயிற்சி எடுத்து வருகிறாா்.

ஒரு நபருக்கு பயிற்சி அளித்து, மின்வாரியம் தனியாா்மயமாக்கப்படுமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

தனியாா் மயம் என்னும் தவறான பிரசாரம், அரசுக்குக் கெட்ட பெயா் ஏற்படுத்தவே செய்யப்படுகிறது. மின்வாரியத்தின் ஒரு பிரிவு கூட தனியாா் மயமாக்கப்படாது. மின்வாரியத்தில் எந்த ஒப்பந்த ஊழியா்களும் கிடையாது. பணி நியமனத்தில் எந்த முறைகேடும் கிடையாது. விசாரணைக்கு நாங்கள் எப்போதுமே தயாா் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

உத்தரவைத் திரும்பப் பெற்றது வாரியம்: மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன அனுமதிக்கான உத்தரவையும், இதற்கு முன்னதாக 5 துணை மின் நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மின்வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.