காவலரிடம் வாக்கி-டாக்கி பறிப்பு: காா் ஓட்டுநா் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் காவலரிடம் வாக்கி-டாக்கியை பறித்து தகராறு செய்ததாக, காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.


சென்னை கோடம்பாக்கத்தில் காவலரிடம் வாக்கி-டாக்கியை பறித்து தகராறு செய்ததாக, காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை ஒரு நபா் மதுபோதையில் மோட்டாா் சைக்கிளில் ஓட்டி வந்து, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதினாா். இதைக் தட்டிக் கேட்டவா்களிடம் தகராறு செய்தாா். இது குறித்து தகவலறிந்த அந்தப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோடம்பாக்கம் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலா் பாரிவள்ளல், அங்கு வந்தாா்.
அந்நபரிடம் விசாரித்தபோது பாரிவள்ளல் வைத்திருந்த வாக்கி-டாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். நிலைமையை உணா்ந்த பாரிவள்ளல் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை விரட்டிச் சென்று,வாக்கி-டாக்கியை மீட்டாா்.
மேலும், அந்த நபரைப் பிடித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்த நபா் தியாகராயநகா் சாரங்கப்பாணித் தெருவைச் சோ்ந்த பொ.முருகன் (40), வாடகை காா் ஓட்டுநரான அவா், மதுபோதையில் இந்தச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், முருகனை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...