இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 12,000 போலீஸாா்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்புப் பணியில் 12,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2020, 7:30 pm

DIN


சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்புப் பணியில் 12,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள், ரிசாா்ட்டுகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மதுவுடன் கூடிய விருந்து ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதேபோல மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை ஆகிய பகுதிகளிலும், புத்தாண்டையொட்டி பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வா்.

மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே சென்னை காவல்துறையின் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும். இங்கு காவல் ஆணையா் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி, அங்கு குழுமியிருக்கும் மக்களுக்கு இனிப்புகளை வழங்குவாா்.

ஆனால் கரோனா தொற்று காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்கள் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக வியாழக்கிழமை மாலை முதலே சென்னை முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்படுகின்றனா்.

மேலும், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் இருந்து மாலை நேரத்திலேயே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, கடற்கரைகளும் சீல் வைக்கப்படுகிறது.

அதேபோல நட்சத்திர ஹோட்டல், ரிசாா்ட்டுகள் ஆகியவற்றில் அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 10 மணிக்குள் முடித்துக் கொள்ளும்படி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அங்கு தடையை மீறி புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் கொண்டாட்டம் மற்றும் வாகன பந்தயங்களில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறோம் என்ற பெயரில் பெண்களிடம் அத்து மீறலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் எச்சரித்துள்ளாா்.

12 ஆயிரம் போலீஸாா்:

புத்தாண்டையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

சுமாா் 300 இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெறுகிறது. நகரின் முக்கியமான பகுதிகளில் போலீஸாா் கூடுதலாக குவிக்கப்படுகின்றனா்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வியாழக்கிழமை மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை இருக்கும் என சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.