இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DMK leader and Chief Minister Stalin - Communist Party of India General Secretary M. Veerapandian, former state secretary I. Mutharasan.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். - @TNDIPRNEWS

Published On :18 மார்ச் 2026, 11:30 am IST

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வேலைகளை ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தீவிரப்படுத்தி வருகின்றன.

200 தொகுதிகளில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் எனும் முழக்கத்துடன் களத்தில் இருக்கும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இ.யூ.மு.லீக், மமக., காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, ம.நீ.ம., கொ.ம.தே.க., எஸ்.டி.பி.ஐ., ம.ஜ.க., முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதுவரை நடத்த பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு இடங்கள் குறைத்து 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - திமுக தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம்.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - திமுக தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம்.

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி தனது கை சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணிச் சின்னத்திலும், மனித நேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும், ம.தி.மு.க. மூன்று தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

இந்த ஐந்து கட்சிகள் போக இன்னும் திமுக கூட்டணியில், அக்கட்சியை தவிர்த்து மொத்தம் 15 கட்சிகள் உள்ளன. இதுவரை திமுக கூட்டணியில் ஆறு கட்சிகளுக்கு 43 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ள நிலையில், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Summary

The seat-sharing agreement was signed in the presence of DMK leader and Chief Minister Stalin, Communist Party of India General Secretary M. Veerapandian, and former State Secretary I. Mutharasan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.