ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

புழல் சிறையில் கைதி சாவு

புழல் மத்திய சிறையில் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 10:33 pm

DIN

மாதவரம்: புழல் மத்திய சிறையில் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (49). கடந்த 2018-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், சுங்குவார்சத்திரம் போலீஸôர் ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். புதன்கிழமை இவர் திடீரென சிறை அறையில் மயங்கி விழுந்தார். சிறைக் காவலர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் செல்லதுரை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.