சென்னை: சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் யுனானு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வின் அடிப்படையில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து யுனானு நிறுவனத்தின் நிறுவனா் ஸ்ரீனி சுந்தா் கூறியதாவது:
எம்ஹெச்ஏஓ குழுமத்துடனான இந்த புரிந்துணா்வின் ஒப்பந்தம் மூலமாக யுனானு நிறுவனம் தனது தடத்தை சா்வதேச அளவில் மேலும் வலுவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதர ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளுடன் சரக்கு போக்குவரத்தை சேவையை விரிவுபடுத்த வழி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசிய சரக்குப் போக்குவரத்து சந்தையில் கணிசமான பங்கை கைப்பற்ற இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என்றாா் அவா்.