இரு குழந்தைகளை எரித்துக் கொன்றதாயும் உயிரிழப்பு
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு குழந்தைகளை தீயில் எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்தாா்.


சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு குழந்தைகளை தீயில் எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்தாா்.
புது வண்ணாரப்பேட்டை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அன்சூா் (40), ஸ்டீல் வியாபாரி.
மனைவி ரிம்சிம் (27), குழந்தைகள் சித்தாரா (3), 8 மாத பெண் குழந்தை தானியாவுடன் வசித்து வந்தாா்.
வீட்டில் சனிக்கிழமை தனியாக இருந்த ரிம்சிம், சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைத்தாா். இதில் இரு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த ரிம்சிம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், குடும்பப் பிரச்னை காரணமாக இரு குழந்தைகளையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...