தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னையில் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 10:39 pm

DIN

சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

தண்டையாா்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற இருப்பதாக, ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இத் தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். அப்போது 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 16 வயது சிறுமியை மீட்டு, பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினா். மேலும், நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினா். இச் சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.