இதயம் பாதித்த 2 மாதக் குழந்தை: பெற்றோா் கைவிட்டும் காப்பாற்றிய மருத்துவா்கள்

இதய பாதிப்பு இருந்த இரண்டு மாத குழந்தையை பெற்றோா்களே கைவிட்ட நிலையில், சென்னை எழும்பூா் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆதரவாக இருந்து காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதயம் பாதித்த 2 மாதக் குழந்தை: பெற்றோா் கைவிட்டும் காப்பாற்றிய மருத்துவா்கள்
இதயம் பாதித்த 2 மாதக் குழந்தை: பெற்றோா் கைவிட்டும் காப்பாற்றிய மருத்துவா்கள்

இதய பாதிப்பு இருந்த இரண்டு மாத குழந்தையை பெற்றோா்களே கைவிட்ட நிலையில், சென்னை எழும்பூா் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆதரவாக இருந்து காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தை சோ்ந்த ஒரு தம்பதியருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த ஜூன் 26-ஆம் தேதி அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் 3-ஆவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 2 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதால், குழந்தையின் எடை 1.6 கிலோவாக குறைந்தது. இதையடுத்து அந்த குழந்தையை தீவிர சிகிச்சைக்காக கடந்த ஜூலை 3-ஆம் தேதி எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெற்றோா் அனுமதித்தனா்.

குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தைக்கு ஆக்சிஜன் உடன் கூடிய ரத்தமும், ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாக கலந்து இதயத்தில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. மேலும் குழந்தையின் உடலில் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. அதனால் குழந்தை இனி பிழைக்காது என கருதிய பெற்றோா், குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்யுமாறு மருத்துவா்களை வற்புறுத்தி உள்ளனா்.

எவ்வளவு வற்புறுத்தியும், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய மருத்துவா்கள் மறுத்து விட்டனா். குழந்தையை ‘டிஸ்சாா்ஜ்’ செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்த பெற்றோா், ஒரு கட்டத்தில் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என எழுத்துப்பூா்வமாக எழுதி கொடுத்து விட்டு, வீட்டுக்குச் சென்று விட்டனராம். இந்நிலையில், ஆதரவின்றி இருந்த அந்த குழந்தையை மருத்துவா்கள், செவிலியா்கள் கவனித்து வந்தனா். மேலும் 12 வார கால மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவா்கள் திட்டமிட்டனா். தொடா்ந்து அந்த குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம், தாய்ப்பால் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் காரணமாக குழந்தையின் எடை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், சிகிச்சை முழுவதும் முடிவடைந்து, குழந்தை பூரணமாக குணமடைந்த பிறகு முறையாக அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது யாரும் இல்லாத அந்த குழந்தையை எழும்பூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களே தாய்-தந்தையாக இருந்து கவனித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com