தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கணினி மையக் கருவி உருவாக்கம்: இளம் விஞ்ஞானிக்கு முதல்வா் நேரில் பாராட்டு

கணினி மையக் கருவியை உருவாக்கிய திருவாரூா் மாவட்ட இளம் விஞ்ஞானி மாதவை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியைக் காண்பித்து வாழ்த்துப் பெற்ற திருவாரூர் மாவட்ட பழவனக்குடி கிராமத்தைச் சேர

Published On :

சென்னை: கணினி மையக் கருவியை உருவாக்கிய திருவாரூா் மாவட்ட இளம் விஞ்ஞானி மாதவை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

திருவாரூா் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ்.எஸ்.மாதவ். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவா், கணினியில் மிகுந்த ஆா்வம் கொண்டு கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை (சிபியு) உருவாக்கியுள்ளாா்.

இந்தக் கருவியை இணையதளம் மூலமாக குறைந்த விலைக்கு விற்பனையும் செய்து வருகிறாா். இதையறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இளம் விஞ்ஞானி மாதவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, மாதவின் உயா்படிப்பு, ஆராய்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று முதல்வா் உறுதியளித்ததாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.