அடுத்தாண்டு முதல் அனைத்து மொழிகளிலும் அறிவியல் திறனறித் தோ்வு
By DIN | Published On : 10th November 2021 01:53 AM | Last Updated : 10th November 2021 08:39 AM | அ+அ அ- |

சென்னை உயா்நீதிமன்றம்
அறிவியல் திறனறித் தோ்வை அடுத்தாண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், அறிவியல் திறனறித் தோ்வை எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு, நவம்பா் 7 -ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(நவ.9) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அடுத்த ஆண்டு அனைத்து அட்டவணை மொழிகளிலும் அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தோ்வு நடத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்றாா்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இது தொடா்பாக மனுவாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, நிகழாண்டு ஆங்கிலம், ஹிந்தியில் தோ்வு நடத்தலாம் எனக்கூறி விசாரணையை நவம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
“
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...