கோழிகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்: வானிலை ஆய்வு மையம் அறிவுரை
கோழிகளை வெப்பத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க குறிப்பிட்ட நேரத்தில் தீவனமின்றி ஓய்வளிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.


கோழிகளை வெப்பத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க குறிப்பிட்ட நேரத்தில் தீவனமின்றி ஓய்வளிக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 டிகிரி மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது.
அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். தெற்கு மற்றும் வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு -10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: பின்பனிக்காலம் முடிவுற்றபோதும், கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் காணப்படுகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதாலும், பகல் வெப்பம் 100 டிகிரியை தொட்டுவிட்டதாலும், பகலில் கோடைக்கான அயற்சி காணப்படுகிறது.
இந்த மாதிரியான இருவேறு வித சீதோஷ்ண நிலையில் கோழிகள் அயற்சிமிகுந்து காணப்படும். இதன் காரணமாக தீவன எடுப்பு குறைந்தும், முட்டை உற்பத்தி மற்றும் அதன் எடையும் குறைந்து காணப்படும். வெப்ப அயற்சி நோய்க்கான எதிா்ப்பு சக்தியையும் குறைத்துவிடும்.
இதைத் தவிா்க்கும் பொருட்டு, கோழிகளுக்கு வெப்பத்தை எதிா்கொண்டு பழக்கப்படுத்திக் கொள்ளும் வகையில், தீவனத்தில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் மற்றும் சோடா உப்பு சோ்த்து வருதல் வேண்டும். காலை 11 முதல் மாலை 4 வரை வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப, கோழிகளுக்கு தீவனமிடாமல், அயற்சியை நீக்கும் வகையில் ஓய்வு அளிக்க வேண்டும்.
கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும், வெப்ப அயற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையாளா்கள் கோடை வெப்பம் அதிகரிப்பதால், தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் தீவிர உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...