வண்டலூர் பூங்கா யானைகள் இருப்பிடத்தில் புதிய வசதிகள்

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான இருப்பிடத்தில் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி
யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான இருப்பிடத்தில் புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்போதும் இரண்டு யானைகள் ரோகினி மற்றும் பிரக்ருதி பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப் பெற்றுள்ளது. ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்திய லிமிடெட், மகிந்திரசிட்டி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ‘சிஎஸ்ஆர்’ ஆதரவை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில், யானைகளுக்கான ‘கிரால்’ கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு ‘சமையலறை’, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் ‘வீடு’, யானைகள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் தொட்டி மற்றும் தண்ணீர் தெளிப்பான் (ஷவர்) மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. யானைகள் இருப்பிடங்களிலிருந்த புதர்கள், களைகள் அகற்றப்பட்டு, அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 2 ஏக்கர் அளவில் யானைகளுக்கான தீவண தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று ராமகிருஷ்ணன், துணை தலைவர் சிஎஸ்ஆர்-ஆர்என்டிபிசிஐ மற்றும் சீனிவாஸ் ரா ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர், ஆர்.காஞ்சனா, உதவி இயக்குநர், பொ.மணிகண்டபிரபு, பூங்கா அலுவலர்கள் மற்றும் ஆர்என்டிபிசிஐ-ன் உயர் அதிகாரிகளான கந்தன், டிஜிஎம், சிஎஸ்ஆர் மற்றும் சுப்பிரமணியன், துணை மேலாளர், சிஎஸ்ஆர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேற்கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் யானைகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த வசதிகளை யானைகள் பயன்படுத்தும் போது பார்வையாளர்களும் நேரில் கண்டு மகிழ்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com