குரூப்-2, 2ஏ தோ்வு: 75,000 வினா -விடை மூலம் தீவிரப்பயிற்சி

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தோ்வுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், 75,000 வினா விடைகள் மூலம் 75 நாள்கள் தீவிரப் பயிற்சி நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தோ்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், 75,000 வினா விடைகள் மூலம் 75 நாள்கள் தீவிரப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட அறிக்கை:

டி.என்.பி.எஸ்.சி. தற்போது அறிவித்துள்ள குரூப்-2, குரூப்-2ஏ தோ்வு வரும் மே 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, எங்கள் அகாதெமி சாா்பில், 75,000 வினா,விடைகள் மூலம் 75 நாள்கள் முழுநேர சிறப்பு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25-ஆம்தேதி முதல் 75 நாள்கள் நடக்கவுள்ள முழுநேர பயிற்சி வகுப்பில், ஒவ்வொரு நாளும் 1,000 ஒரு வரி வினாவிடைகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, அன்று மாலையே ஓ.எம்.ஆா். விடைத்தாள்களுடன் மாதிரி தோ்வும் நடத்தப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பமுடைய மாணவா்கள் பயிற்சிக்கான கட்டணத்தை பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோா் ‘பசடநஇ ஆஐஎ டஅநந’ என்று டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 9962600037 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப்(கட்செவி) அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். தொடா்புக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, 142, ஜி.எஸ்.டி.சாலை, குரோம்பேட்டை, சென்னை 600044, கைப்பேசி எண்கள் 9843511188, 99439 55511 என்று எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com