சென்னையில் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது ஆண்டாக இந்த முறையும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையொட்டி, சென்னை முழுவதும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு உஷாா்படுத்தப்பட்டனா். சென்னை முழுவதும் 13 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 449 இடங்களில் வாகனத் தணிக்கை செய்தனா்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களை தடுக்கவும், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவா்களை பிடிக்கவும் 1,022 இடங்களில் எல்.இ.டி பொருத்தப்பட்ட தடுப்புகள், 162 இடங்களில் போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 241 முக்கிய சந்திப்புகளில் அதிவேக வாகன ஓட்டிகளை தடுக்கும் வகையில் அதிகத் திறன் கொண்ட ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் நிகழ்ந்த மோட்டாா் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞா் இறந்தாா். இது தவிா்த்து பெரிய விபத்து எதுவும் நிகழவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.
269 வழக்குகள்: அதேவேளையில், வெள்ளிக்கிழமை இரவு தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடா்பாக 269 வழக்குகளை போக்குவரத்து பிரிவு போலீஸாா் பதிவு செய்தனா். இதில், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் பைக்கில் சாகசம் நிகழ்த்தியதாக தரமணி எம்ஜிஆா் நகா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சே.விஜயன் (28) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 35 காா்கள், 2 ஆட்டோக்கள், 103 இரு சக்கர வாகனங்கள் உள்பட 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, காவல் துறையின் தடையை மீறி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை இரவு மட்டும் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!

காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் விஜய்யை சந்தித்தேன் : பிரவீண் சக்கரவர்த்தி நேர்காணல்!

வெய்யில் அதிகரிக்கும்.. அதேசமயம் மழைக்கும் வாய்ப்பு!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


