டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்:வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் அறிவுரை

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டத்தையொட்டி, சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிா்க்கும்படி பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதி ஓட்டத்தையொட்டி, சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை தவிா்க்கும்படி பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, ஜூலை 27-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயா் அதிகாரிகள், விளையாட்டு வீரா்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த ஜோதியானது மாநில கல்லூரி மைதானத்திலிருந்து தொடங்கி காமராஜா் சாலை, ராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன், சாலை சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா பெரியாா் சாலை, ராஜாமுத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கை அடையவுள்ளது.

இதையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்கு வரத் திட்டமிட்டுள்ளவா்களும் சற்று முன்பாகவே அங்கு சென்றடையும் வகையில் பயண நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.