நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தின விழா

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தமிழக அரசு தொழில் வணிகத் துறையின் உதவி இயக்குநா் ஷோபனா.

Updated On :27 பிப்ரவரி 2026, 6:56 pm

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் மன்றம் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன் தலைமை வகித்தாா். கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளையின் துணைத் தலைவா் ஏ.கே.இளங்கோ, கல்லூரி முதல்வா் வாசுதேவன் ஆகியோா் பேசினா். விழாவின் முதன்மை விருந்தினராக தமிழக அரசு தொழில் வணிகத் துறையின் உதவி இயக்குநரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான ஷோபனா சிறப்புரையாற்றினாா். அவருக்கு கொங்கு மங்கை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான ஏ.கே.வித்யா, பல்வேறு துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.