போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

எடப்பாடி அருகே ஸ்ரீ ஞான கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண தேரோட்டம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி கிராமம் கல்ல பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞான கந்தசாமி கோயில் உள்ளது. 

News image
Updated On :18 மார்ச் 2022, 7:41 am

DIN

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி கிராமம் கல்ல பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஞான கந்தசாமி கோயில் உள்ளது. 

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இரண்டு தினங்களுக்கு முன்பு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைப்பெற்றது. 

பின்னர் மலர் அலங்காரத்தில் ஸ்ரீ ஞான கந்தசாமி வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து முத்து ரதத்தில் சாமி திருத்தேர் நடந்தது பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேர் இழுத்தும், காவடி எடுத்து கோவிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் விழா ஏற்பாட்டினை தர்மகர்த்தா மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.