செய்யறிவால் ஜென் ஸி, ஆல்பா தலைமுறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) இயக்குநர் கணேசன் கண்ணபிரான் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் கலந்துகொண்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் இயக்குநர் கணேசன் கண்ணபிரான் அடுத்த தலைமுறையினருக்கான கல்விமுறை குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
“மாணவர்களுக்கு எளிதில் சென்றுசேரும் வகையில் கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும். நமது சமூகமும் இளைஞர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய ஜென் ஸி தலைமுறையினர் ஏற்கெனவே உயர்கல்விக்கு வந்துவிட்டார்கள். ஜென் ஆல்பா தலைமுறையினர் உயர்கல்விக்கு வரப் போகிறார்கள். இந்த இரண்டு தலைமுறையினரும் மற்ற தலைமுறையினரை ஒப்பிடுகையில் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு உலகளவிலான கலாசாரம் பற்றி தெரிந்திருக்கிறது. இவர்கள் தங்களின் இலக்குகளை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஜென் ஆல்பா தலைமுறையினரின் கல்வி முறையை செய்யறிவு பாதித்துள்ளது. செய்யறிவுக்கு ஏற்ற வகையில் அவர்களை தயார்படுத்துவது குறித்து உயர்கல்வி அமைப்பு பணியாற்றி வருகின்றது.
ஜென் ஸி தலைமுறையினர் ஏற்கெனவே பணிபுரியும் இடங்களில் செய்யறிவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Summary
Gen Z, Alpha Generations Affected by AI! NAAG Director
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

நூறு சாமி டீசர்!

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணமோசடி வழக்கு: நேபாள முன்னாள் அமைச்சா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

