புதுதில்லி: பங்குச் சந்தையில் முதல் 10 மதிப்புள்ள நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.63,478.46 கோடி வரை உயர்ந்தன. இதில் லார்சன் & டூப்ரோ மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் முன்னணி வகுத்தன.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் கடந்த வாரம் 187.95 புள்ளிகள் வரை உயர்ந்தன.
லார்சன் & டூப்ரோ, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு உயர்ந்த அதே வேளையில் பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு சரிந்தன.
லார்சன் & டூப்ரோ சந்தை மதிப்பீடு ரூ.28,523.31 கோடி அதிகரித்து ரூ.6,02,552.24 கோடியாகவும், எஸ்பிஐ ரூ.16,015.12 கோடி அதிகரித்து ரூ.11,22,581.56 கோடியாகவும், எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு ரூ.9,617.56 கோடி அதிகரித்து ரூ.14,03,239.48 கோடியாகவும், எல்ஐசியின் மதிப்பு ரூ.5,977.12 கோடி அதிகரித்து ரூ.5,52,203.92 கோடியாகவும் இருந்தன.
அதே வேளையில், பஜாஜ் ஃபைனான்ஸ் சந்தை மூலதனம் ரூ.3,142.36 கோடி அதிகரித்து ரூ.6,40,387 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் ரூ.202.99 கோடி அதிகரித்து ரூ.19,21,678.78 கோடியாகவும் உயர்ந்தன.
மறுபுறம் பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ.15,338.66 கோடி சரிந்து ரூ.11,27,705.37 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.14,632.10 கோடி சரிந்து ரூ.9,97,346.67 கோடியாகவும், இன்போசிஸ் சந்தை மூலதனம் ரூ.6,791.58 கோடி சரிந்து ரூ.5,48,496.14 கோடியாகவும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சந்தை மூலதனம் ரூ.1,989.95 கோடி சரிந்து ரூ.9,72,053.48 கோடியாகவும் உள்ளது.
Summary
The combined market valuation of six of the top-10 valued firms climbed Rs 63,478.46 crore last week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மதிப்புமிக்க 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 92,995 கோடியாக அதிகரிப்பு!

6 மதிப்புமிக்க நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 88,678 கோடி உயர்வு!

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



