அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, பிப். 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு

News image
அந்நியச் செலாவணி கையிருப்பு
Updated On :21 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, பிப். 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72,572.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 866.3 கோடி டாலா் அதிகரித்து, 72,572.7 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், அது 671.1 கோடி டாலா் சரிந்து, 71,706.4 கோடி டாலராக குறைந்திருந்தது.

பிப். 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 355 கோடி டாலா் அதிகரித்து, 57,360.3 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 499 கோடி டாலா் அதிகரித்து, 12,846.6 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 10.3 கோடி டாலா் அதிகரித்து, 1,892.4 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில்(ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.9 கோடி டாலா் அதிகரித்து, 473.4 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.