சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம்
சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.


சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை தில்லி-வாரணாசி வழித்தடத்திலும், 2-ஆவது சேவை தில்லி-ஜம்மு-காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-ஆவது சேவை மும்பை-காந்தி நகா் வழித்தடத்திலும், 4-ஆவது சேவை ஹிமாசல பிரதேசம் உனாவின் அம்ப் ஹண்ட்வரா - புது தில்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதன் 5-ஆவது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் வரும் நவ.11-ஆம் தேதி பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா். வந்தே பாரத் ரயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு காலை 10.25 மணிக்கும், மைசூருவுக்கு மதியம் 12.30 மணி அளிலும் சென்றடைகிறது.
இதன் வேகம் மணிக்கு 160 கி. மீ. இருந்தாலும், மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு 6 மணி நேரம் 40 நிமிடம் செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு இந்த ரயில் திங்கள்கிழமை காலை 5.50 மணி அளவில் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...