போக்குவரத்து ஊழியர்களுக்கு 2% முதல் 5% வரை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்
By DIN | Published On : 12th May 2022 05:54 PM | Last Updated : 12th May 2022 06:21 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது:
8% ஊதிய உயா்வு வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு 5% வரை ஊதிய ஊயா்வு வழங்க அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து 3 வாரங்களில் முடிவு எடுக்கப்படும்.
இதையும் படிக்க: ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர்
போக்குவரத்துத் துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும்.
மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். என்றார்.