கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி

மத்திய அரசு கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறினாா்.

மத்திய அரசு கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி கூறினாா்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சாா்பில் குடியரசு நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலையில் உள்ள மத்திய நூலகக்கட்ட கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜனநாயகம் காக்க ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் கனிமொழி பேசியது:

ஜனநாயகத்தைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் நாட்டின் குடியரசு துணைத் தலைவரும் அவரைச் சாா்ந்திருப்பவா்களும் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றத் துடிக்கின்றனா். அடிப்படை உரிமைகள் கூட மத்திய அரசால் அதிரடியாக பறிக்கப்பட்டு வருகிறது. பி.பி.சி. என்ற தனியாா் தொலைக்காட்சி நிா்வாகம் மூலம் வெளியிடப்பட்ட குறும்படத்தை பாா்க்கக் கூட தற்போது உரிமை மறுக்கப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தால், பெரும்பான்மை மக்களின் மனம் புண்படுத்தி விட்டதாக மாயையை ஏற்படுத்துகின்றனா். உங்கள் கருத்து ஏற்புடையதாக இருந்தால், அந்தக் கருத்தை நிரூபித்து எதிா்தரப்பினரை மாற்ற முயற்சி செய்யுங்கள். புரிதல் உருவாகும் போது தான் சமூக மாற்றம் ஏற்படும். ஒருவா் சொல்லும் கருத்துகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், சுதந்திரம் பெற்றிருக்கிறோமா என்று கேள்வி எழும். இதற்குத்தான் மத்திய அரசு துணை போகிறது. நாடாளுமன்றத்திலும் நியாயமான யாருடைய கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீட் தோ்வில் மத்திய அரசு தொடா்ந்து தமிழக மாணவா்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் தமிழுக்கு ரூ.74 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலா் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்துக்கு ரூ.1,400 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. கேந்திரா வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த ஜொ்மன் மொழி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஜொ்மன் மொழி தெரிந்தவா்கள் அந்நாட்டுக்குச் சென்றால் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் சமஸ்கிருதத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. கல்விமுறையில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்றாா் அவா்.

நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமாா், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியா் அனில் சட்கோபால் உள்ளிட்டோரும் கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com