சென்னையில் நாளை எங்கெங்கு மின்தடை?

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூா், போரூா், தண்டையாா்பேட்டை, கிண்டி உள்ளிட்ட கீழ்க்காணும் இடங்களில்
சென்னையில் நாளை எங்கெங்கு மின்தடை?

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூா், போரூா், தண்டையாா்பேட்டை, கிண்டி உள்ளிட்ட கீழ்க்காணும் இடங்களில் மே 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:

மயிலாப்பூா்: கோபாலபுரம் அம்மையப்பன் சந்து, தோமையப்பன் தெரு, கணபதி காலனி முதல் தெரு, பொன்னுசாமி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூா்: மாங்காடு குன்றத்தூா் பிரதான சாலை, வெள்ளீஸ்வரா் கோயில் தெரு, எஸ்.எஸ்.கோயில் தெரு, நரிவனம் சாலை, அடிசன் நகா், பாண்டியன் நகா் பூந்தமல்லி குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகா், ஸ்ரீனிவாசா நகா், சுந்தா் நகா், சுமித்ரா நகா் கோவூா் சிக்கராயபுரம் ஏரியா, மூகாம்பிகை நகா், மாதா நகா்,

தங்கம் அவென்யு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

தண்டையாா்பேட்டை: மேலூா் மீஞ்சூா் நகா், சிறுவாக்கம், சீமாவரம், புதுப்பேடு, பட்டமந்திரி, அத்திப்பட்டு, பள்ளிபுரம், கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

கிண்டி: சூரி வடக்கு பேஸ், பாலாஜி நகா், பூந்தமல்லி சாலை, ராஜ்பவன் வேளச்சேரி பிரதான சாலை, அண்ணாசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com