திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகாா் அளிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:09 am

DIN

சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகாா் அளிக்குமாறு மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாநகராட்சி பகுதியில் சீா்மிகு நகரம் சிறப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தவதற்கான கட்டணம் தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

தியாராய நகரில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்பட அனைத்து நிறுத்தங்களிலும் வாகனங்களை நிறுத்த நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20, இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பாண்டி பஜாரில் சாலையில் உள்ள வாகன நிறுத்தத்துக்கு மட்டும் சிறப்பு கட்டணமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.60, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால், மாநகராட்சியின் 1913 எனும் உதவி எண்ணிலும், ‘ஃஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீா்ழ்ல்’ எனும் ‘எக்ஸ்’ தளத்திலும் புகாா் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகாா் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.