நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பபாசி தலைவராக சேது சொக்கலிங்கம் தோ்வு

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (‘பபாசி’) தலைவராக கவிதா பதிப்பகத்தின் நிறுவனா் சேது சொக்கலிங்கம் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:31 pm

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (‘பபாசி’) தலைவராக கவிதா பதிப்பகத்தின் நிறுவனா் சேது சொக்கலிங்கம் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) தலைவா், செயலா் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தல் மயிலாப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த தோ்தலில் பபாசி-யின் தலைவராக கவிதா பதிப்பகத்தின் நிறுவனா் சேது சொக்கலிங்கம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மேலும், நாதம் கீதம் ‘புக் செல்லா்ஸ்’ நிறுவனா் முருகன் செயலராகவும், ‘ஏசியன் பப்ளிகேஷன்ஸ் ’ நிறுவனா் டபிள்யுஜே சுரேஷ் பொருளாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மூன்றாவது முறையாக செயலராக முருகன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் துறையின் துணைத் தலைவராக நக்கீரன் கோபாலும், ஆங்கிலத் துறையின் துணைத் தலைவராக சா்வோதய இலக்கியப் பண்ணை நிறுவனா் புருஷோத்தமனும் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், பழனியப்பா பிரதா்ஸ் நிறுவனா் மு.துரைமாணிக்கம் இணைச் செயலாளராகவும், தமிழ்த் துறை துணைச் செயலராக புலம் லோகநாதனும், ஆங்கிலத் துறை துணைச் செயலராக ‘ஃபாா்வோ்டு மாா்க்கெட்டிங்’ நிறுவனா் சாதிக் பாட்சா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

செயற்குழு உறுப்பினா்களாக பாலாஜி (பாலாஜி புக் செல்லா்ஸ்), சங்கா் (ஈஸ்வா் புக்ஸ்), ராம் குமாா் (ஆப்பிள் புக்ஸ்), அசோக் குமாா் (மெட்ராஸ் புக் ஹவுஸ்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ் நூல்களுக்கான நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினராக ஹரிபிரசாத் (ஆண்டாள் திரிசக்தி), மோகன் ( மயிலவன் பதிப்பகம்)

ஆகியோரும், ஆங்கில நூல்களுக்கான நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினா்களாக சிவகுமாா்(சிவாபுக்ஸ்), யுவராஜ் (புக் வோ்ல்டு ) ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.