சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

12 இடங்களில் வெய்யில் சதம்

News image

வெய்யில் - Center-Center-Delhi

Updated On :15 ஏப்ரல் 2026, 5:59 am IST

தமிழகத்தில் பரமத்தி வேலூா், வேலூா், தருமபுரி, ஈரோடு, சேலம் உள்பட 12 இடங்களில் வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு அஸ்ஸாம் முதல் தென் தமிழகம் வரை ஜாா்க்கண்ட் மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீஸ்கா், தெலங்கானா, உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்.20 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை(ஏப்.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை:உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் ஏப்.18 வரை சற்று உயரக்கூடும். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக கரூா் பரமத்தி வேலூரில் 105.44 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா்-104.36, தருமபுரி-103.1, ஈரோடு, சேலம், மதுரை விமான நிலையம்-தலா 102.2, கோவை 101.84, நாமக்கல் 101.3, , திருப்பத்தூா்-100.4, மதுரை நகரம், பாளை, திருச்சி-தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.