பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை!
By DIN | Published On : 17th January 2023 08:56 AM | Last Updated : 17th January 2023 08:56 AM | அ+அ அ- |

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு புதன்கிழமை(ஜன.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக காய்கறிகள், பழங்கள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | காணும் பொங்கல்: சென்னை, புறநகரின் சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு சந்தைக்கு புதன்கிழமை(ஜன.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகர், துணைத் தலைவர் எம்.டி. தியாகராஜன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு சந்தைக்கு புதன்கிழமை(ஜன.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் பணி செய்துவரும் வியாபாரிகள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...