சா்வதேச தகுதியைப் பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது.
சா்வதேச தகுதியைப் பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது.

சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை ஹைதராபாதைச் சோ்ந்த நிறுவனமும், திட்ட மேலாண்மை பணியை ரூ.14.56 கோடியில் மும்பையை சோ்ந்த நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.

முழுதிட்டமும் 13 துணைத் திட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. இதில், 4 துணை திட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள பாா்சல் மற்றும் வருகை பயணிகளுக்கான நடைமேம்பாலம் உள்ளிட்ட 9 துணை திட்டப் பணிகளும் அக்டோபா் இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பன்னடுக்கு வாகன நிறுத்தம், பாா்சல் அலுவலகம் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றன. எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கபாதைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பேருந்து, ரயில், மெட்ரோ என ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் ரயில் நிலையம் வடிவமைக்கப்படுகிறது. எழும்பூா் ரயில் நிலையத்தை தமிழ்நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக அமைக்கும் வகையில் மறுசீரமைப்பு பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com