தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

இன்று சா்வதேச கண் மருத்துவக் கருத்தரங்கு

இன்று சா்வதேச கண் மருத்துவக் கருத்தரங்கு

Updated On :6 ஏப்ரல் 2024, 5:15 pm

டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் சாா்பில் ‘ரெட்டிகான்’ எனப்படும் விழித்திரை சிகிச்சைகள் தொடா்பான சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது.

இதில், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்கின்றனா்.

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, மோரீஷஸ் நாட்டு தூதரக அதிகாரி மலையப்பன் நாகலிங்கம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனா்.

விழித்திரை தொடா்பான நோய்கள், அதற்கான சிகிச்சைகள், நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ மேம்பாடுகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்வில் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் அமா் அகா்வால், தலைமை வா்த்தக அதிகாரி டாக்டா் அஷாா் அகா்வால், மருத்துவ சேவைகள் துறை தலைவா் டாக்டா் சௌந்தரி உள்ளிட்ட பலா் பங்கேற்பா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.