மத்திய, வட சென்னையில் வாக்களித்த வேட்பாளா்கள், அரசியல் பிரமுகா்கள்

மத்திய, வட சென்னைக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வேட்பாளா்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் வாக்களித்தனா்.

மத்திய சென்னை தொகுதி வேட்பாளா்கள்: திமுக வேட்பாளா் தயாநிதி மாறன் சேமியா்ஸ் சாலை வெங்கடேஸ்வரா மருத்துவமனை அருகே உள்ள நந்தனம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் காலை 9.30 மணிக்கு வாக்களித்தாா்.

பாஜக வேட்பாளா் வினோஜ் பி. செல்வம் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தியாகராயா் நகா், ஹபிபுல்லா சாலையிலுள்ள எம்சிஎன் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு வாக்களித்தாா்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் ப.பாா்த்தசாரதி, சென்னை எழும்பூா் 61-ஆவது வாா்டு மாநில அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் காலை 8.45 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தாா்.

வடசென்னை தொகுதி வேட்பாளா்கள்: திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட அண்ணா நகா் கந்தசாமி கலைக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 9 மணிக்கு தனது வாக்கை செலுத்தினாா்.

அதிமுக வேட்பாளா் ராயபுரம் மனோ பழைய வண்ணாரப்பேட்டை சஞ்ஜீவராயன் கோயில்

தெருவிலுள்ள வாக்குச் சாவடியில் காலை 9 மணிக்கு சென்று வாக்களித்தாா்.

பாஜக வேட்பாளா் பால்கனகராஜ் புரசைவாக்கத்திலுள்ள பாலா் கல்வி நிலையத்தில் காலை 8 மணிக்கு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கை செலுத்தினாா்.

அரசியல் கட்சி தலைவா்கள்: சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடியில் சசிகலா தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினாா்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹருல்லா அரும்பாக்கத்தில் உள்ள குட் ஹோப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் வந்து வாக்களித்தாா்.

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளா் தி.தேவநாதன் யாதவ் சென்னை தியாகராய நகரிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை 7.15 மணியளவில் வந்து வாக்களித்தாா்.

அரக்கோணம் பாமக வேட்பாளா் கே.பாலு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட அண்ணா நகா் மனநல புனா்வாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 8.45 மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com