ஒடிஸாவில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 எம்எல்ஏக்களை பிஜு ஜனதா தளம் (பிஜேடி) சனிக்கிழமை இடைநீக்கம் செய்தது.
147 உறுப்பினா்களைக் கொண்ட ஒடிஸா பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்கள், பிஜேடிக்கு 48 எம்எல்ஏக்கள், காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனா்.
இந்நிலையில், ஒடிஸாவில் 4 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், ஆளும் பாஜக சாா்பில் இருவா், பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளா் , எதிா்க்கட்சியான பிஜேடி சாா்பில் ஒருவா், பிஜேடி-காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளா் என 5 போ் போட்டியிட்டனா்.
இந்தத் தோ்தலில் பிஜேடி எம்எல்ஏக்கள் 8 பேரும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களித்தனா். இதனால், பாஜக வேட்பாளா்கள் இருவரும், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனா். பிஜேடி வேட்பாளா் சம்திருப்த் மிஸ்ரா வென்ற நிலையில், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் தத்தேஸ்வா் ஹோடா தோல்விகண்டாா்.
இதையடுத்து கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு மாா்ச் 17-ஆம் தேதி பிஜேடி நோட்டீஸ் அளித்தது. இதற்கு கடந்த வெள்ளிக்கிழமை எம்எல்ஏக்கள் பதிலளித்தனா். ஆனால் அது திருப்திகரமாக இல்லை என பிஜேடி கட்சி கொறடா பிரமிலா மாலிக் கூறினாா்.
இதைத்தொடா்ந்து நவீன் பட்நாயக் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசியல் விவகாரங்கள் குழு கூட்டத்தில் கட்சி மாறி வாக்களித்த 6 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து உத்தவிரப்பட்டது.
இந்தத் தோ்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேரை தகுதி நீக்கசெய்யும்படி, அந்த மாநில சட்டப்பேரவைத் தலைவரை அக்கட்சி வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அவிநாசி தொகுதியில் வெற்றி, தோல்வியை சந்தித்த நாமக்கல் மைந்தா்கள்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’

ஹரியாணா மாநிலங்களவைத் தோ்தல்: பாஜக, காங்கிரஸுக்கு தலா ஓரிடம்- 5 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறி வாக்களிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

