மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சியின் தலைமை இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 16 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், ஹரியாணாவில் பாஜக ஆதரவு பெற்ற சதீஷ் நந்தல் எனும் சுயட்ச்சை வேட்பாளருக்கு, அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் தராம்பால் மாலிக் தலைமையிலான ஒழுங்குமுறைக் குழு, நரைங்கர் தொகுதியின் ஷேலி சவுத்ரி, சதௌராவின் ரேணு பாலா, ரதியாவின் ஜர்னைல் சிங், ஹாதினிலின் முகமது இஸ்ராயில் மற்றும் புன்ஹானாவின் முகமது இலியாஸ் ஆகியோரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் ஹரியாணாவின் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஒப்புதல் வழங்கியுள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கரம்வீர் சிங் பௌத்துக்கே வாக்களித்ததாகக் கூறி ரேணு பாலா, ஷேலி சவுத்ரி மற்றும் ஜர்னைல் சிங் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
மேலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 5 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக, ஹரியாணா காங்கிரஸ் தலைவர் ராவ் நரேந்தர் சிங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Congress party has suspended five of its MLAs from Haryana who voted in favor of the BJP in the Rajya Sabha elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் : முதல்வர் விஜய்
மாநிலங்களவை பதவியும் வேண்டாம்.. ராஜிநாமா பற்றி சித்தராமையா விளக்கம்!
10 மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இழப்பு!

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


