பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!

ஆந்திரத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 4 இடங்களையும் தேஜகூ கைப்பற்றவுள்ளது குறித்து...

Andhra pradesh NDA

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண்... - கோப்புப் படம்

Published On :

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், 4 இடங்களையும் தெலுங்கும் தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அயோத்திய ராமி ரெட்டி, பி சுபாஷ்சந்திர போஸ், நாத்வானி பரிமல் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் எஸ் சதீஷ் பாபு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகின்றது.

இதனால், வரும் ஜூன் 18 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காலியாகப் போகும் 4 இடங்களையும் ஆளுங்கட்சியான தெலுக்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தே.ஜ.கூட்டணியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் 2 இடங்களையும், ஜனசேனா மற்றும் பாஜக ஆகியவை தலா 1 இடத்தையும் கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, மாநிலங்களவையில் தற்போதைய நிலவரப்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 7 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

ஆனால், ஆந்திரத்தில் நடைபெற்ற 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளன.

மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திர சட்டப்பேரவையில் வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அக்கட்சி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In the upcoming Rajya Sabha elections in Andhra Pradesh, the TDP-led NDA is expected to capture all four seats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.