உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருப்பு: சமிக் பட்டாச்சார்யா

திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர் என்று சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தது குறித்து...

Samik Bhattacharya

சமிக் பட்டாச்சார்யா - படம் - ஏஎன்ஐ

Published On :

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர் என்று பாஜகவின் மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சமிக் பட்டாச்சார்யா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வென்று, மமதா பானர்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சியை அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 21) ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், வாக்குப்பதிவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தான் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்குக் காரணமாக, முதல்வர் சுவேந்து அதிகாரி ஃபால்டா தொகுதிக்கு சில முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும் அதற்கு தான் முழுஆதரவு தெரிவித்து போட்டியிலிருந்து விலகுவதாகவும் ஜஹாங்கீர் கான் கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய சமிக் பட்டாச்சார்யா, ” திரிணமூல் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியே அல்ல. அக்கட்சியில் இருந்தவர்கள் அரசியல் அதிகாரத்துக்காகவே அங்கு இருந்தனர். தற்போது பாஜக அதிகாரத்தில் உள்ளது. ஆகவே, மேற்கு வங்க மக்கள் நமக்கு அளித்த ஆதரவை நிலைநிறுத்துவது நம்முடைய கடமை ஆகும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் என்று நான் கூறவில்லை. அதிலும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாஜகவில் சேர விரும்புகின்றனர். அவர்கள் குறித்து கட்சிதான் முடிவுசெய்ய வேண்டும். மேலும் அவர்கள் பாஜகவில் சேர வரிசையில் காத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

Summary

Samik Bhattacharya, the BJP's State President and a Rajya Sabha member, stated on Friday that Trinamool Congress workers in West Bengal are waiting in queues to join the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.