இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள்கள் வங்கி சேவை முடங்கும்!

மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

SBI staffs calls for two day nationwide protest on May 25, 26

எஸ்பிஐ (கோப்புப்படம்) - IANS

Published On :22 மே 2026, 5:49 pm IST

ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி வருகிற மே 25, 26 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதற்கு முந்தைய மே 23 - 4ஆவது சனிக்கிழமை, மே 24 - ஞாயிறு விடுமுறை நாள்களாகும். அதேபோல மே 27 - பக்ரீத் பண்டிகை அன்று பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை நாளாகும்.

இதனால் எஸ்பிஐ வங்கி சேவைகள், தொடர்ந்து 5 நாள்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க முயற்சி செய்வதக்கவும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், வேலைநிறுத்த நாள்களில் ஏடிஎம், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

போராட்டம் ஏன்?

ஊழியர்களை தற்காலிகமாக அன்றி, நிரந்தரமாக பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதிய திட்ட(என்பிஎஸ்) பயனாளிகளுக்கான ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

ஏனெனில் தற்காலிக ஊழியர்கள் மூலமாக தரவுகள் கசிந்து முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டுகின்றனர்.

Summary

SBI staffs calls for two day nationwide protest on May 25, 26

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.