இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம்! காரணம் அறிய...

வேலை நிறுத்தம் போன்றவற்றால் எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம் என்று தகவல்கள்...

SBI Bank

எஸ்பிஐ வங்கி - file photo

Published On :18 மே 2026, 3:54 pm IST

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம், மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வரும் வாரத்தில் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் நிலை நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது, வார இறுதிநாள் விடுமுறை மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தொடர்ச்சியாக ஆறு நாள்கள் வரை எஸ்பிஐ வங்கி விடுமுறையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, மே 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படலாம். மத்திய அரசு, பல காலமாக, வங்கி ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்து வருவதாகவும், ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்த நிலையில், மே 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த இரு நாள்களும் வங்கிகளுக்கு விடுமுறை.

மேலும், மே 27, 28ஆம் தேதிகளில் பல மாநிலங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தொடர்ச்சியாக எஸ்பிஐ வங்கியில் 6 நாள்களுக்கு விடுமுறை மற்றும் வங்கிகள் மூடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் அத்தியாவசிய வங்கிப் பணிகள் ஏதேனும் இருந்தால் அதனை மே 23ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், வங்கிப் பணிகளை ஆன்லைன் வங்கி, மொபைல் வங்கி, யுபிஐ, வங்கி ஏடிஎம் போன்றவற்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவும் வழிகாட்டப்பட்டுள்ளது.

Summary

SBI Bank may be closed for 6 consecutive days Find out the reason

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.