அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் வெற்றி! அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!
/

ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

இந்திய தேர்தல் ஆணையம் - ANI

Updated On :22 மே 2026, 10:15 am IST

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், காலியானதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 11 வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், ஜூன் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்த கட்சி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளரே மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Story image

தமிழ்நாடு மட்டுமின்றி, மகாராஷ்டிரத்திலும் மாநிலங்களவை பதவியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா அஜித் பவார் ராஜிநாமா செய்திருந்தார். அந்த காலியிடத்துக்கும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேலும், 10 மாநிலங்களில் பதவிக் காலம் முடியவுள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்துக்கும் ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

June 18 – Rajya Sabha Bypoll in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.