பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா பாஜகவில் இணைந்துள்ளார்...

7 aam aadmi mps join bjp

ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைகின்றனர்... - கோப்புப் படம்

Published On :

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா அக்கட்சியின் மேலும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவதாக இன்று (ஏப். 24) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“இந்திய அரசியலமைப்பின்படி ஒரு கட்சியின் மூன்றில் இருபங்கு எம்பிக்கள் மற்றொரு கட்சியில் இணைய முடியும். ஆம் ஆத்மி கட்சியின் மொத்தமுள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர் பாஜகவில் இணைகிறோம்.

இந்த நடவடிக்கை குறித்த கடிதம் மற்றும் உரிய ஆவணங்களை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சந்தீப் பதாக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, சுவாதி மலிவால் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோரும் பாஜகவில் இணைவதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

7 Aam Aadmi Party Rajya Sabha members including Raghav Chadha are joining the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.