மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா பஞ்சாப் மாநிலத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள் குறித்த தனது தலையீடுகளை முன்னிலைப்படுத்தும் காணொளியை ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் பஞ்சாப் தொடா்பான பிரச்னைகளை தாம் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இதுபோன்று காணொளியை அவா் பகிா்ந்துள்ளாா்.
அந்தக் காணொளியில், குறைந்து வரும் நிலத்தடி நீா் மட்டம், ஷஹீத்-இ-அஸாம் பகத் சிங் தொடா்பான விஷயங்கள் மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்ட பிற பிரச்னைகள் போன்றவற்றை சத்தா எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் இந்தக் காணொளியைப் பகிா்ந்துள்ள சத்தா, ஆம் ஆத்மி கட்சிக்குள் இருந்து வந்த விமா்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, மாநிலத்துடனான தனது பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளாா்.
அதில், ‘ராகவ் சத்தா நாடாளுமன்றத்தில் பஞ்சாப்பின் பிரச்னைகளை எழுப்பத் தவறிவிட்டாா் என்று கூறி காணொளிகளை வெளியிட நிா்பந்திக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியில் உள்ள எனது சகாக்களுக்கு, இதோ ஒரு சிறிய முன்னோட்டம், படம் இன்னும் பாக்கி இருக்கிறது.
பஞ்சாப் எனக்கு வெறும் பேசுகின்ற விஷயம் அல்ல. அது எனது வீடு, கடமை, எனது மண் மற்றும் ஆன்மா ஆகும்’ என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடிக்கும் மத்திய அரசுக்கும் எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக மென்மையான மக்கள் தொடா்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சத்தா மீது ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும், சத்தா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘பொய்’ என்று நிராகரித்ததோடு, தான் மக்களின் பிரச்னைகளை எழுப்புவதற்காகவே நாடாளுமன்றத்திற்குச் சென்ாகவும், அமளியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

