மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து ராகவ் சதாவை நீக்கியது கட்சியின் உள்விஷயம், ஆனால் அவரை அவையில் பேசவிடாமல் தடுப்பது தவறு என்று பாஜக வெள்ளிக்கிழமை கூறியது.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை, தனது கட்சியில் திறமையான எந்தவொரு நபரையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு பயந்த தலைவா் என்று கடுமையாகச் சாடினாா்.
ராகவ் சத்தா தனது மௌனத்தை நீண்ட காலத்திற்கு முன்பே உடைத்திருக்க வேண்டும். அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு திறமை இருக்கிறது, முதலில் அவா் தேவைப்படுபவா்களைப் பயன்படுத்துவாா், பின்னா் அவா்களை வெளியேற்றுவாா், என்று சச்தேவா கூறினாா்.
வியாழக்கிழமை, ஆம் ஆத்மி கட்சி ராகவ் சத்தாவை மாநிலங்களவையில் கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கியது. தகவல்களின்படி, பஞ்சாபிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யான சத்தாவிற்கு, ஆம் ஆத்மி கட்சியின் ஒதுக்கீட்டிலிருந்து அவையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கக்கூடாது என்று மாநிலங்களவை செயலகத்திற்கு கட்சி கடிதம் எழுதியுள்ளது.
வெள்ளிக்கிழமை பதிலளித்த சத்தா, தான் தோற்கடிக்கப்படவில்லை, அமைதியாக்கப்பட்டுள்ளேன் என்று கூறினாா். எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் சத்தா, எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்கள் தொடா்பான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறேன். ஆனால் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது குற்றமா? நான் ஏதேனும் குற்றம் செய்தேனா? என்று கேள்வி எழுப்பினாா். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிா்த்து, அதற்குப் பதிலாக மென்மையான மக்கள் தொடா்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, ஆம் ஆத்மி கட்சி சத்தாவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்தது.
நாடாளுமன்றத்தில் பல விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை சத்தா எடுக்கத் தவறியதாகவும், முக்கியப் பிரச்சினைகளில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததில் அவா் கலந்துகொள்ளவில்லை என்றும் தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரப் பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.
தொடர்புடையது

மத்திய அரசுக்கு எதிராக ராகவ் சத்தா மென்மையான போக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
என்ன குற்றம் செய்தேன்? நடவடிக்கை ஏன்? ஆம் ஆத்மிக்கு ராகவ் சத்தா கேள்வி!
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


