அன்பில் மகேஸுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

 Ponneri Constituency Reallocated to Congress

காங்கிரஸ்.

Updated On :

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப். 3) வெளியிடப்பட்டது. இதில், 2 பெண்கள் உள்பட 27 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது.

தில்லியில் நேற்றிரவு நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல், நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

Story image

இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான 27 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் இன்று (ஏப்.3) வெளியிடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு பென்னகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குளச்சல் தொகுதியில் விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும், சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர்கள்

1. பொன்னேரி (தனி) -துரை சந்திரசேகர்

2. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செல்வப்பெருந்தகை

3. சோளிங்கர் - முனிரத்தினம்

4. உதகமண்டலம் - ராமச்சந்திரன்

5. ஈராடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்

6. அறந்தாங்கி - டி.ராமச்சந்திரன்

7. கடலூர் - சந்திரசேகரன்

8. மயிலாடுதுறை - ஜமால் யூனிஸ் முகம்மது

9. காரைக்குடி - எஸ்.மாங்குடி

10. சிவகாசி - கணேசன் அசோகன்

11. திருவாடனை - ராம.கருமாணிக்கம்

12. திருவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்

13. நாங்குநேரி - ரூபி மனோகரன்

14. குளச்சல் - தாரகை கத்பர்ட்

15. விளவங்கோடு - டிடி.பிரவீன்

16. கிள்ளியூர் - ராஜேஸ்குமார்

17. வேளச்சேரி - ஜெ.எம். ஹசன் மௌலானா

18. ஊத்தங்கரை (தனி) - குப்புசாமி

19. துறையூர் (தனி) - லெனின் பிரசாத்

20. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ்

21. ஆத்தூர் (தனி) - அர்த்தனாரி

22. பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

23. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு

24. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை

25. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்

26. உசிலம்பட்டி - சரவணக்குமார்

27. சங்கரன்கோவில் - சங்கை கணேசன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Summary

The Congress party's candidate list for the Legislative Assembly elections in Tamil Nadu was released today (April 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.