
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு! - காங்கிரஸ்!
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களுக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் என காங்கிரஸ் அறிவிப்பு...

மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் - கோப்புப் படம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாக, மகாராஷ்டிரா காங்கிரஸ் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கைகளில் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு எதிரான வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக 2 தேர்தல் ஆணையர்கள் கூறியதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தில்லியில், இன்று (அக்.2) நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மற்றும் முன்னாள் முதல்வர் அதிஷி ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் முறைக்கேடுகளை எதிர்த்தும், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெறும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கல் உறுதி அளித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“தேர்தல் முறைகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியது அவசியம்தான். ஆனால், இதில் முக்கியமான சதிகாரர்களின் ராஜிநாமாவும் தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பையில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று மாலை முதல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Maharashtra Congress has announced its support for the protests demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






