தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப். 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்.
இதற்கிடையே, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியில், அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை, கோவை வடக்கில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து, நீண்ட காலமாக பதவிக்காகக் காத்திருந்த விஜயதரணிக்கு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் பட்டியல்: ஆவடி - ராஜசிம்ம மகிந்திரா, மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தரராஜன், தளி - டாக்டர் நாகேஷ் குமார், திருவண்ணாமலை - சி. ஏழுமலை, ராசிபுரம் (தனி) - டாக்டர் எஸ்டி பிரேம்குமார், மொடக்குறிச்சி - கிருத்திகா சிவக்குமார், உதகை - போஜ ராஜன், அவிநாசி (தனி) - எல். முருகன், திருப்பூர் தெற்கு - தங்கராஜ், கோவை வடக்கு - வானதி சீனிவாசன், திருவாரூர் - கோவி சந்துர், தஞ்சை - எம். முருகானந்தம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கந்தர்வக்கோட்டை - உதயகுமார், புதுக்கோட்டை - ராமச்சந்திரன், அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த், திருப்பத்தூர் - கே.சி. திருமாறன், மானாமதுரை - பால கணபதி, மதுரை தெற்கு - ராம சீனிவாசன், சாத்தூர் - நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் - கே. நாகேந்திரன், திருச்செந்தூர் - கேஆர்எம் ராதாகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் (தனி) - ஆனந்தன் ஐயாசாமி, ராதாபுரம் - பாலகிருஷ்ணன், நாகர்கோயில் - எம்.ஆர். காந்தி, கொளச்சல் - டி. சிவக்குமார், பத்மநாபபுரம் - பி. ரமேஷ், விளவங்கோடு - எஸ். விஜயதாரணி ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என்று பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நான்கு பாஜக எம்எல்ஏக்களில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்ஆர் காந்தி ஆகிய மூன்று பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 27 வேட்பாளர்களில் 5 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்.4 மற்றும் 6ஆம் தேதி என இரண்டு நாள்கள் மட்டுமே உள்ளன.
சில மாற்றங்களில் முக்கியமானதாக, மொடக்குறிச்சி எம்எல்ஏவாக உள்ள சரஸ்வதிக்கு மாற்றாக, அவரது மருமகள் கிருத்திகா சிவக்குமாருக்கு அதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இழுபறிக்குக் காரணம் அண்ணாமலைதானா?
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. பட்டியல் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்த போது, கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு ஒதுக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
பிறகு, அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால், கோவை வடக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான பேச்சுவார்த்தையால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அண்ணாமலை நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜக தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில், வேட்பாளர் பட்டியல் வெளியடப்பட்டுள்ளது.
Summary
The list of candidates for the constituencies contested by the BJP in the AIADMK alliance in the Tamil Nadu Assembly elections has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுக்கு மக்கள் ஆசி உண்டு: கோயிலில் வணங்கிய பிறகு வேட்பாளர்கள் பேட்டி!

அண்ணாமலை போட்டியிட மறுப்பு? பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

