நாட்டின் 10 மாநிலங்களில் நடைபெறவுள்ள 26 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் 10 மாநிலங்களில் காலியாகும் 26 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜயா சிங் மற்றும் இணையமைச்சர்கள் ரவ்நீத் சிங் மற்றும் ஜார்ஜ் குரியன் உள்பட சுமார் 24 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முடிவுக்கு வருகின்றது.
ஏற்கெனவே, மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 26 இடங்களில் பாஜகவின் தேஜகூட்டணி 18 இடங்கள், காங்கிரஸ் 4 இடங்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 3 இடங்கள் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவின் தேஜகூட்டணி 17 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களையும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தவெக 1 இடத்தையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆந்திரம், குஜராத், கர்நாடகத்தில் 4 இடங்களுக்கும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 3 இடங்களுக்கும், ஜார்க்கண்டில் 2 இடங்களுக்கும் மற்றும் மணிப்பூர், மேகாலயா, அருணாசலம் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடத்துக்கும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 1 மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
It is reported that the BJP-led NDA is set to lose one seat in the Rajya Sabha elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல்! ஆந்திரத்தில் 4 இடங்களையும் கைப்பற்றும் தேஜகூ!

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!






