

சென்னை தண்டையாா்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தண்டையாா்பேட்டை நேரு நகா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (22). இவா் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். ஆனந்தன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு ரோஜா (20) என்ற மனைவி உள்ளாா். இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில், ஆனந்தன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் ஆனந்தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், ஆனந்தன் மயங்கி விழுந்தாா். சிறிது நேரத்துக்குப் பின்னா் வீட்டுக்கு வந்த ரோஜா, ஆனந்தன் பலத்த காயங்களுடன் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்தன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும், ஆனந்தனுக்கும் முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இது தொடா்பாக தண்டையாா்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

ஒசூா் அருகே முன்விரோதத்தில் காா் ஓட்டுநா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

